PT 6.5.8

பார்த்தன் தேரூர்ந்தவன் வாழும் இடம் நறையூர்

1495 வெள்ளைப்புரவைத்தேர்விசயற்காய் விறல்வியூகம்
விள்ள * சிந்துக்கோன்விழஊர்ந்த விமலனூர் *
கொள்ளைக்கொழுமீ னுண்குருகுஓடிப்பெடையோடும் *
நள்ளக்கமலத்தேறலுகுக்கும் நறையூரே.
1495 vĕl̤l̤aip puravit ter vicayaṟku āy * viṟal viyūkam
vil̤l̤a * cintukkoṉ vizha * ūrnta vimalaṉ ūr ** -
kŏl̤l̤aik kŏzhu mīṉ * uṇ kuruku oṭi pĕṭaiyoṭum *
nal̤l̤ak kamalat * teṟal ukukkum-naṟaiyūre-8

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1495. The faultless lord who drove a chariot yoked with white horses for Arjunā in the Bhārathā war and conquered Jeyanthiran in battle stays in beautiful Thirunaraiyur where cranes run swiftly, catch fat fish and eat them with their mates and lovely lotuses drip with honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளை வெள்ளை; புரவித் தேர் குதிரைகள் பூட்டின தேரை; விசயற்கு ஆய் அர்ஜுநனுக்காக செலுத்தினவனும்; விறல் எதிரிகளின்; வியூகம் விள்ள சேனை சிதறும்படியாகவும்; சிந்துக்கோன் சிந்துதேசத்தரசன் ஜயத்ரதன்; விழ அழியும்படியாகவும்; ஊர்ந்த தேரை செலுத்தின; விமலன் ஊர் விமலன் இருக்கும் ஊர்; கொள்ளை கொழுத்த; கொழு மீன் மீன்களை; உண் பிடித்துண்ணும்; குருகு ஓடி கொக்குகள் ஓடிச்சென்று; பெடையோடும் பெடையோடும்; நள்ளக் செறிந்த இதழ்களைடைய; கமல தாமரைகளில்; தேறல் உகுக்கும் தேனைப்பருகும்; நறையூரே திருநறையூராகும்