Chapter 2

Thirukkudalur - (தாம் தம்)

திருக்கூடலூர்
Thirukkudalur - (தாம் தம்)
This village is known as Aadhuthurai Perumal Kovil. Since the Devas gathered here in large numbers to worship and praise the Lord, this place is called Koodalur. The presiding deity here is known as Vaiyam Kaatha Perumal. This village is located seven miles east of Thiruvaiyaru.
இவ்வூருக்கு ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்று பெயர். தேவர்கள் கூட்டமாகக் கூடி பகவானைஇந்த எம்பெருமானை. வணங்கி வாழ்த்திய இடமாதலால் இவ்வூருக்குக் கூடலூர் என்று பெயர். இங்கிருக்கும் பெருமாளுக்கு வையம் காத்த பெருமாள் என்று பெயர். இவ்வூர் திருவையாற்றுக்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது.
Verses: 1358 to 1367
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will not get affected by the results of karma
  • PT 5.2.1
    1358 ## தாம் தம் பெருமை அறியார் * தூது
    வேந்தர்க்கு ஆய * வேந்தர் ஊர்போல் *
    காந்தள் விரல் * மென் கலை நல் மடவார் *
    கூந்தல் கமழும் * கூடலூரே 1
  • PT 5.2.2
    1359 செறும் திண் * திமில் ஏறு உடைய * பின்னை
    பெறும் தண் கோலம் * பெற்றார் ஊர்போல் **
    நறும் தண் தீம் * தேன் உண்ட வண்டு *
    குறிஞ்சி பாடும் * கூடலூரே 2
  • PT 5.2.3
    1360 பிள்ளை உருவாய்த் * தயிர் உண்டு * அடியேன்
    உள்ளம் புகுந்த * ஒருவர் ஊர்போல் **
    கள்ள நாரை * வயலுள் * கயல்மீன்
    கொள்ளை கொள்ளும் * கூடலூரே 3
  • PT 5.2.4
    1361 கூற்று ஏர் உருவின் * குறள் ஆய் * நிலம் நீர்
    ஏற்றான் எந்தை * பெருமான் ஊர்போல் *
    சேற்று ஏர் உழவர் * கோதைப் போது ஊண் *
    கோல் தேன் முரலும் * கூடலூரே 4
  • PT 5.2.5
    1362 தொண்டர் பரவச் * சுடர் சென்று அணவ *
    அண்டத்து அமரும் * அடிகள் ஊர்போல் **
    வண்டல் அலையுள் * கெண்டை மிளிர *
    கொண்டல் அதிரும் * கூடலூரே 5
  • PT 5.2.6
    1363 தக்கன் வேள்வி * தகர்த்த தலைவன் *
    துக்கம் துடைத்த * துணைவர் ஊர்போல் **
    எக்கல் இடு * நுண் மணல்மேல் * எங்கும்
    கொக்கின் பழம் வீழ் * கூடலூரே 6
  • PT 5.2.7
    1364 கருந் தண் கடலும் * மலையும் உலகும் *
    அருந்தும் அடிகள் * அமரும் ஊர்போல **
    பெருந் தண் முல்லைப் * பிள்ளை ஓடி *
    குருந்தம் தழுவும் * கூடலூரே 7
  • PT 5.2.8
    1365 கலை வாழ் * பிணையோடு அணையும் * திருநீர்
    மலை வாழ் எந்தை * மருவும் ஊர்போல் **
    இலை தாழ் தெங்கின் * மேல்நின்று * இளநீர்க்
    குலை தாழ் கிடங்கின் * கூடலூரே 8
  • PT 5.2.9
    1366 பெருகு காதல் அடியேன் * உள்ளம்
    உருகப் புகுந்த * ஒருவர் ஊர் போல் **
    அருகு கைதை மலர * கெண்டை
    குருகு என்று அஞ்சும் * கூடலூரே 9
  • PT 5.2.10
    1367 ## காவிப் பெருநீர் வண்ணன் * கண்ணன்
    மேவித் திகழும் * கூடலூர்மேல் **
    கோவைத் தமிழால் * கலியன் சொன்ன *
    பாவைப் பாட பாவம் போமே 10