Tirunāṅkūr is the Place of Him Who Killed Pūtanā
பூதகியைக் கொன்றவன் இடம் திருநாங்கூர்
1223 பண்நேர்மொழிஆய்ச்சியர்அஞ்ச வஞ்சப்
பகுவாய்க்கழுதுக்குஇரங்காது * அவள்தன்
உண்ணாமுலைமற்றவளாவியோடும்
உடனேசுவைத்தானிடம் * ஓங்குபைந்தாள்
கண்ணார்கரும்பின்கழைதின்றுவைகிக்
கழுநீரில்மூழ்கிச்செழுநீர்த்தடத்து *
மண்ணேந்துஇளமேதிகள்வைகு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!