The Place for Lord Kaṇṇa is Tirunāṅkūr
கண்ணபிரானுக்கு இடம் திருநாங்கூர்
1222 இழையாடுகொங்கைத்தலைநஞ்சம்உண்டிட்டு
இளங்கன்றுகொண்டுவிளங்காய்எறிந்து *
தழைவாடவந்தாள்குருந்தம்ஓசித்துத்
தடந்தாமரைப்பொய்கைபுக்கான்இடந்தான் *
குழையாடவல்லிக்குலமாட மாடே
குயில்கூவநீடுகொடிமாடம்மல்கு *
மழையாடுசோலைமயிலாலு நாங்கூர் *
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!