PT 3.8.4

Worship the Gem-Mansioned Temple of the Lord on Garuḍa

கருடவாகனனின் மணிமாடக் கோயிலை வணங்கு

1221 சிறையார்உவணப்புள்ளொன்றுஏறி அன்று

திசைநான்கும்நான்கும்இரிய * செருவில்

கறையார்நெடுவேலரக்கர்மடியக்

கடல்சூழிலங்கை கடந்தான்இடந்தான் *

முறையால்வளர்க்கின்ற முத்தீயர்நால்வேதர்

ஐவேள்வியாறங்கர் ஏழினிசையோர் *

மறையோர்வணங்கப்புகழெய்து நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!

Text size