PT 3.7.1

கள்வனும் என் மகளும் ஆலிநகர் புகுவரோ?

1208 கள்வன்கொல்? யான்அறியேன்கரியானொரு காளைவந்து *
வள்ளிமருங்குல் என்தன் மடமானினைப் போதவென்று *
வெள்ளிவளைக்கை பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று *
அள்ளலம்பூங்கழனி அணியாலிபுகுவர்கொலோ? (2)
PT.3.7.1
1208 ## kal̤vaṉkŏl? yāṉ aṟiyeṉ * kariyāṉ ŏru kāl̤ai vantu *
val̤l̤i maruṅkul * ĕṉ-taṉ maṭa māṉiṉaip pota ĕṉṟu **
vĕl̤l̤i val̤aik kai * paṟṟap pĕṟṟa tāyarai viṭṭu akaṉṟu *
al̤l̤al am pūṅ kazhaṉi * aṇi āli pukuvarkŏlo?-1

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1208. Her mother says, “Is he a thief? I don’t know who he is. A dark one like a bull came to my daughter, as innocent as a doe and with a waist thin as a vine, and he said, ‘Come. ’ He took her hand ornamented with silver bangles and went with her. She left me, her mother. I gave birth to her but she went with him. Will they go to the beautiful Thiruvāli flourishing with muddy fields?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்வன் கொல் கள்வனோ அன்றி உடையவன் தானோ; யான் அறியேன் நான் அறியேன்; கரியான் கருத்த நிற; ஒரு காளை வந்து காளை ஒருவன் வந்து; வள்ளி மருங்குல் என்தன் நுண்ணிய இடையுடைய என்; மட மானினை இள மான் போன்ற என் பெண்ணை; போத என்று வா என்று அழைத்து; வெள்ளி வளை வெள்ளி வளையணிந்துள்ள; கைப் பற்ற கையைப் பிடிக்க; பெற்ற தாயரை பெற்ற தாயான என்னை; விட்டு அகன்று விட்டு போய் விட்டாள்; அள்ளல் சேற்று நிலங்களிலே; அம் பூ அழகிய பூக்கள்; கழனி நிறைந்த வயல்களையுடைய; அணி ஆலி அழகிய திருவாலி; புகுவர்கொலோ புகுந்தார்களோ
kal̤vankol īs he a thief (or the owner)?; yān aṛiyĕn ī don-t know; kariyān oru kāl̤ai vandhu a dark, young person came; val̤l̤i marungul having slender waist; endhan mada māninai my daughter, who is very young; pŏdha enṛu urged her saying -Come! Come!-; vel̤l̤i val̤aik kai paṝa holding her hand which has silver bangles; peṝa thāyarai me who is her mother; ittu aganṛu leaving alone; al̤l̤al in mud; am pūngazhani having fertile fields which are filled with beautiful flowers; aṇi āli in thiruvāli which is an ornament for the earth; puguvarkolŏ will they enter?