1209 பண்டு இவன் ஆயன்நங்காய்! படிறன் புகுந்து * என்மகள்தன் தொண்டையஞ்செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து * அவன் பின் கெண்டையொண்கண்மிளிரக் கிளிபோல்மிழற்றி நடந்து * வண்டமர்கானல்மல்கும் வயலாலி புகுவர்கொலோ?
PT.3.7.2
1209 பண்டு இவன் ஆயன் நங்காய் * படிறன் புகுந்து * என் மகள் தன் தொண்டை அம் செங் கனி வாய் * நுகர்ந்தானை உகந்து ** அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிரக் * கிளிபோல் மிழற்றி நடந்து * வண்டு அமர் கானல் மல்கும் * வயல் ஆலி புகுவர்கொலோ? 2
1209. Her mother says,
“O, friend, he is a cowherd and he is naughty.
When he entered our home and kissed my daughter on her mouth,
as red as a thondai fruit,
she was happy and walked behind him prattling like a parrot
and her eyes shone like kendai fish.
Will they go to beautiful Vayalāli (Thiruvāli)
surrounded by the seashore swarming with bees?”
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
nangāy — ŏh neighbourhood girls!; ivan — this youthful person; paṇdu — previously; āyan padiṛan — was a thief in the cowherd clan (who would steal the cowherd girls); pugundhu — entered (into my home physically); en magal̤ than — my youthful daughter, her; thoṇdai sengani am vāy nugarndhān — drank the nectar from her beautiful lips which are like reddish kŏvai fruit; ugandhu — (my daughter) desiring him; keṇdai — like keṇdai fish; oṇ kaṇ — beautiful eyes; mil̤ira — becoming expanded and shining (due to seeing something unseen); kil̤i pŏl — like a parrot; mizhaṝi — speaking some words; avan pin nadandhu — walking behind him (both of them, who became united); vaṇdu amar — filled with beetles; kānal malgum — surrounded by seaside gardens; vayal — having fertile fields; āli — in thiruvāli; puguvar kolŏ — they may reach or not!
Āchārya Vyākyānam
கீழ் பாட்டில் ஸூவ்ந்தர்யாதிகளைக் காட்டி மயக்கி என்னை இட்டு விட்டுப் போனான் அங்கனம் அன்றிக்கே – சொக்குப் போடி -தூத வியாபாரங்கள் அம்மான் பொடி -மந்திரப்பட்டாளோ -என்று அசல் அகத்தாருக்குச் சொல்வது போல் இப்பாசுரம்
பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன் தொண்டை யஞ் செங்கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து வண்டமர்