PT 2.1.5

எங்கும் செல்லாதே! வேங்கடவனையே சேர்

1052 பொங்குபோதியும்பிண்டியும்முடைப் புத்தர்நோன்பியர் பள்ளியுள்ளுறை *
தங்கள்தேவரும்தாங்களுமேயாக என்நெஞ்சமென்பாய்! *
எங்கும்வானவர்தானவர் நிறைந்தேத்தும்வேங்கடம்மேவி நின்றருள் *
அங்கணாயகற்கு இன்று அடிமைத்தொழில்பூண்டாயே.
PT.2.1.5
1052 pŏṅku potiyum piṇṭiyum uṭaip * puttar noṉpiyar pal̤l̤iyul̤ uṟai *
taṅkal̤ tevarum tāṅkal̤ume āka * ĕṉ nĕñcam ĕṉpāy **
ĕṅkum vāṉavar tāṉavar niṟaintu ettum * veṅkaṭam mevi niṉṟu arul̤ *
am kaṇ nāyakaṟku * iṉṟu aṭimait tŏzhil pūṇṭāye-5

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1052. O heart, the Buddhists fast and worship their god who stays under a bodhi tree and the Jains remain in their Palli and worship their god who stays under a flourishing peepul tree, each performing their own kind of worship. Our god who is praised everywhere by the gods in the sky and the Asurans stays in the Thiruvenkatam hills and gives his grace to all. Become the slave of the beautiful lord now.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சம் என்பாய்! ஓ மனமே!; பொங்கு நன்றாக வளர்ந்திருக்கும்; போதியும் அரசமரத்தையும்; பிண்டியும் அசோகமரத்தையும்; உடை உடையவர்களான; புத்தர் நோன்பியர் பௌத்தரும் சமணரும்; பள்ளியுள் உறை தமது தேவாலயங்களிலுள்ள; தங்கள் தேவரும் தங்கள் தேவதைகளும்; தாங்களுமே தாங்களுமேயாய்; ஆக எங்கும் நிறைந்த போதும்; எங்கும் வானவர் எங்கும் தேவர்களும்; தானவர் நிறைந்து அசுரர்களும் நிறைந்து; ஏத்தும் வணங்கும்; வேங்கடம் மேவி வேங்கடமலையில்; நின்று அருள் இருந்து அருள்செய்கின்ற; அம் கண் நாயகற்கு அழகிய கண்களையுடைய பெருமானுக்கு; இன்று இன்று; அடிமை கைங்கர்யம் பண்ணுவதை; தொழில் பூண்டாயே ஏற்றுக் கொண்டாயே
en nenjam enbāy ẏou who can be desired as -my mind!-; pongu grown well with stems and branches; bŏdhiyum arasa (sacred fig) tree; piṇdiyum aṣŏka tree; udai having as refuge; puththar baudhdhas (followers of budhdha philosophy); nŏnbiyar amaṇas (jainas, followers of jaina philosophy); pal̤l̤i ul̤ inside their temples; uṛai living; thangal̤ their; dhĕvarum worshippable deity; thāngal̤umĕ āga to have them only present; engum in all four directions; vānavar dhĕvathās; dhānavar asuras; niṛaindhu present densely; ĕththum praising; vĕngadam on thirumalā; mĕvi ninṛu present firmly; arul̤ one who fulfils the desires of devotees; angaṇ having beautiful eyes; nāyagaṛku for the sarvaswāmy (lord of all); inṛu adimaith thozhil pūṇdāyĕ now, you are engaged in serving him!