PT 2.1.4

வேங்கடவனை நினை; வைகுந்தம் கிடைக்கும்

1051 பாவியாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டுதொண்டு செய்தாரை * மண்மிசை
மேவிஆட்கொண்டுபோய் விசும்பேறவைக்கும்எந்தை *
கோவிநாயகன்கொண்டலுந்துயர் வேங்கடமலையாண்டு * வானவர்
ஆவியாயிருப்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.
PT.2.1.4
1051 pāviyātu cĕytāy * ĕṉ nĕñcame paṇṭu tŏṇṭu cĕytārai * maṇmicai
mevi āṭkŏṇṭu poy * vicumpu eṟa vaikkum ĕntai **
kovi nāyakaṉ kŏṇṭal untu uyar * veṅkaṭa malai āṇṭu * vāṉavar
āviyāy iruppāṟku * aṭimait tŏzhil pūṇṭāye-4

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1051. Once, He came down to this earth, gathered those who served Him with love, and lifted them up to dwell in SriVaikuntam. He is the Lord of the cowherd girls, the One who rules the towering Vēṅkaṭa hills, where clouds gather and glide across the peaks. He is the very life of the nityasūris above. And now, without faltering, you, my heart, have chosen to serve Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சமே! என் மனமே!; பாவி யாது செய்தாய் தடுமாறாமல் செய்தாய்; பண்டு முன்பு; மண்மிசை மேவி இப்பூமியில் வந்து அவதரித்து; தொண்டு தொண்டு; செய்தாரை செய்தவர்களை; ஆட்கொண்டு போய் ஆட்படுத்திக்கொண்டு போய்; விசும்புஏற பரமபதத்திலே; வைக்கும் எந்தை வைக்கும் ஸ்வாமியும்; கோவி கோபிகைகளுக்கு; நாயகன் நாதனும்; கொண்டல் மேகத்தளவு; உந்து உயர் உயர்ந்த சிகரமுடைய; வேங்கடமலை வேங்கடமலையை; ஆண்டு ஆண்டுகொண்டு; வானவர் தேவர்களுக்கு; ஆவியாய் உயிராயிருக்கும்; இருப்பாற்கு எம்பெருமானுக்கு; அடிமை கைங்கர்யம் பண்ணுவதை; தொழில் பூண்டாயே ஏற்றுக் கொண்டாயே
en nenjamĕ ŏh my mind!; pāviyādhu without fumbling; seydhāy you did;; paṇdu previously; thoṇdu seydhārai (to uplift) those who served; maṇmisai on earth; mĕvi mercifully incarnated; āl̤ koṇdu engaging (them) in service; pŏy carrying them (in archirādhi mārgam (the path leading to paramapadham) from here); visumbu ĕṛa vaikkum one who places in paramapadham; kŏvi nāyagan being dear to ṣrī gŏpikās; endhai being my lord; koṇdal clouds; undhu pushing; uyar tall; vĕngada malaiyilĕ on thirumalā; āṇdu ruling over both nithya and leelā vibhūthis; vānavarkku for nithyasūris; āviyāy iruppāṛku for the one who is the life; adimaith thozhil pūṇdāyĕ you are engaged in serving him!