PT 2.1.6

தேவாதி தேவனுக்கே அடிமையாகு

1053 துவரியாடையர்மட்டையர் சமண்தொண்டர்கள் மண்டியுண்டுபின்னரும் *
தமரும் தாங்களுமேதடிக்க என்நெஞ்சமென்பாய்! *
கவரிமாக்கணம்சேரும்வேங்கடம்கோயில்கொண்ட கண்ணார்விசும்பிடை *
அமரநாயகற்கு இன்று அடிமைத்தொழில்பூண்டாயே.
PT.2.1.6
1053 tuvari āṭaiyar maṭṭaiyar * camaṇ tŏṇṭarkal̤ maṇṭi uṇṭu piṉṉarum *
tamarum tāṅkal̤ume taṭikka * ĕṉ nĕñcam ĕṉpāy **
kavari māk kaṇam cerum * veṅkaṭam koyil kŏṇṭa kaṇ ār vicumpiṭai *
amara nāyakaṟku * iṉṟu aṭimait tŏzhil pūṇṭāye-6

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1053. Though the Jain followers, wearing saffron robes and shaved heads, gather together, eat well, and grow fat along with their families, The Lord who has made the sacred Tirumalai, where herds of kavari deer roam, as His temple, reigns in the vast Paramapadam as the leader of the nityasuris. Today, you, O mind, have chosen to serve Him with loving kainkaryam!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துவரி காஷாய வஸ்த்ரம்; ஆடையர் அணிந்தவர்களாய்; மட்டையர் மொட்டைத்தலையுடன்; சமண் தொண்டர்கள் இருக்கும் சமணர்கள்; மண்டி ஒருவர்க்கொருவர் போட்டியிட்டுக்கொண்டு; உண்டு உணவுகளை; பின்னரும் உட்கொண்டு அதனால்; தமரும் அவர்களும்; தாங்களுமே அவர்களைச் சேர்ந்தவர்களும்; தடிக்க உடல் தடித்துக்கிடக்க; என் நெஞ்சம் என்பாய்! ஓ மனமே!; கவரி மா கவரிமான்கள்; கணம் கூட்டம் கூட்டமாக; சேரும் சேர்ந்திருக்கப்பெற்ற; வேங்கடம் திருமலையை; கோயில் கோயிலாக; கொண்ட கொண்டவனும்; கண் ஆர் விசாலாமான; விசும்பிடை பரமபதத்திலேயுள்ள; அமரர் நாயகற்கு இன்று நித்யஸூரிகளுக்குத் தலைவனுக்கு இன்று; அடிமை கைங்கர்யம் பண்ணுவதை; தொழில் பூண்டாயே ஏற்றுக் கொண்டாயே
thuvari saffronised; ādaiyar having cloth; mattaiyar having tonsured head; samaṇ thoṇdargal̤ those who follow kshapaṇa (jaina) matham; maṇdi remaining close to each other; uṇdu eat; pinnarum subsequently; thamarum their relatives; thāngal̤umĕ them too; thadikka becoming fat (due to eating as pleased); en nenjam enbāy ẏou, who are my mind; kavari mā animals having fur; kaṇam herds; sĕrum gathering; vĕngadam thirumalā; kŏyil koṇda having as abode; kaṇ ār spacious; visumbu idai residing in paramapadham; amarar for nithyasūris; nāyagaṛku for the lord; inṛu adimaith thozhil pūṇdāyĕ now, you are engaged in serving him!