PT 11.8.5

வெள்ளத்தில் சிக்கிய நரிக்கூட்டம் போல

2026 கொள்ளக்குறையாத இடும்பைக்குழியில் *
தள்ளிப்புகப்பெய்திகொல்? என்றுஅதற்குஅஞ்சி *
வெள்ளத்திடைப்பட்ட நரியினம்போலே *
உள்ளம்துளங்காநிற்பன் ஊழிமுதல்வா!
2026 kŏl̤l̤ak kuṟaiyāta * iṭumpaik kuzhiyil *
tal̤l̤ip pukap pĕytikŏl * ĕṉṟu ataṟku añci- **
vĕl̤l̤attiṭaippaṭṭa * nari iṉampole- *
ul̤l̤am tul̤aṅkāniṟpaṉ * ūzhi mutalvā-5

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2026. I have suffered, born in many births and I am afraid you, the ancient god of the eon, will make me fall into the hole of birth again. My mind shivers like a crowd of foxes caught in a flood.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊழி முதல்வா! பிரளயகாலத்தில் காப்பவனே!; கொள்ள அநுபவித்தாலும்; குறையாத குறையாத; இடும்பை குழியில் கர்ப்பக் குழியில்; தள்ளி தள்ளி; புக புகும்படி செய்து மேலும் மேலும்; பெய்திகொல் என்று தள்ளி விடுவாயோ என்று; அதற்கு அஞ்சி அதற்கு அஞ்சி பயந்து; வெள்ளத்திடைப்பட்ட வெள்ளத்தில் அகப்பட்ட; நரி இனம் போலே நரிக் கூட்டம் போல; உள்ளம் என் மனம்; துளங்கா நிற்பன் தடுமாறுகிறது என்கிறார்