PT 11.8.6

இடையன் (அரைகுறையாக) வெட்டிய மரம் போல்

2027 படைநின்ற பைந்தாமரையோடு * அணிநீலம்
மடைநின்றலரும் வயலாலிமணாளா! *
இடையனெறிந்தமரமே ஒத்திராமே *
அடையஅருளாய் எனக்குஉன்தனருளே.
2027 paṭai niṉṟa * paintāmaraiyoṭu * aṇi nīlam
maṭai niṉṟu alarum * vayal āli maṇāl̤ā **
iṭaiyaṉ ĕṟinta marame * ŏttu irāme- *
aṭaiya arul̤āy * ĕṉakku uṉ-taṉ arul̤e-6

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2027. You are the Manālan of Vayalāli (Thiruvāli) where beautiful neelam flowers bloom near the water filled with lovely blossoming lotuses. I should not suffer like a tree cut down by a shepherd and thrown away. Give me your grace so I may reach you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படை நின்ற கலப்பைக்கும் தப்பி நின்ற; பைந்தாமரையோடு தாமரை மலரோடு; அணி நீலம் நீலோத்பலங்களும் பறித்து எறியபட்டு; மடை நின்று நீர்பாயும் மடையிலே கிடந்து; அலரும் மலரும்; வயல் வயல்களையுடைய; ஆலி திருவாலியில்; மணாளா! இருக்கும் பெருமானே!; இடையன் இடையனானவர்கள்; எறிந்த மரமே கத்தியால் வெட்டி சாய்த்த மரம்; ஒத்து இராமே ஒரு புறமும் உலராதபடி; அடைய நான் உன்னை அடையும்படி; அருளாய் அருள் புரிவாய்; எனக்கு உன் தன் எனக்கு உன் அருளையே; அருளே அருளவேண்டும்