PT 11.8.4

இருதலைக் கொள்ளி எறும்பு போல

2025 உருவார்பிறவிக்கள் இன்னம்புகப்பெய்து *

திரிவாயென்றுசிந்தித்தி என்றதற்கஞ்சி *

இருபாடெரிகொள்ளியினுள் எறும்பேபோல் *

உருகாநிற்கும் என்னுள்ளம்ஊழிமுதல்வா!
2025 uru ār piṟavikkal̤ * iṉṉam pukap pĕytu *
tirivāy ĕṉṟu cintitti * ĕṉṟu ataṟku añci- **
iru pāṭu ĕri kŏl̤l̤iyiṉ * ul̤-ĕṟumpepol- *
urukāniṟkum * ĕṉ ul̤l̤am ūzhi mutalvā-4

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2025. I am afraid that you, the lord of the eon, will make me be born in many more births and suffer. My mind is in pain like an ant caught on a torch burning at both ends.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊழி பிரளயகாலத்திலும்; முதல்வா! காப்பவனே!; உரு ஆர் பல விதமான; பிறவிக்கள் பிறப்புக்களிலே; இன்னம் இன்னமும்; புகப் பெய்து என்னைப் புகச் செய்து; திரிவாய் திரியக் கடவாய்; என்று சுற்றிச் சுழலக்கடவாய் என்று; சிந்தித்து என்று நீ நினைக்கிறாயோ என்று; அதற்கு அஞ்சி அதற்கு அஞ்சி; இருபாடு எரி இரண்டு பக்கத்திலும் எரியும்; கொள்ளியின் கொள்ளிக் கட்டையின்; உள் நடுவே அகப்பட்ட; எறும்பே போல் எறும்பு போல்; என் உள்ளம் என் உள்ளம்; உருகா நிற்கும் உருகுகின்றது