PT 11.7.4

ஆர்வத்தால் பாடாதார் பாட்டு பாட்டல்ல

2015 கூடாஇரணியனைக் கூருகிரால்மார்விடந்த *
ஓடாஅடலரியை உம்பரார்கோமனை *
தோடார்நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால் *
பாடாதார்பாட்டுஎன்றும் பாட்டல்லகேட்டாமே.
2015 kūṭā iraṇiyaṉaik * kūr ukirāl mārvu iṭanta *
oṭā aṭal ariyai * umparār komāṉai **
toṭu ār naṟun tuzhāy mārvaṉai- * ārvattāl
pāṭātār pāṭṭu ĕṉṟum * pāṭṭu alla keṭṭāme

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2015. The god of the gods with a chest adorned with a fragrant fresh thulasi garland took the form of a man-lion and split open the chest of Hiranyan with his sharp claws. If devotees do not sing his praise, the songs that they sing are not real songs.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூடா பகைவனான; இரணியனை இரணியனின்; மார்வு மார்பை; கூர் உகிரால் கூர்மையான நகங்களால்; இடந்த பிளந்தவனும்; ஓடா இரணியனுக்குப் பின்வாங்காத; அடல் வீரம்பொருந்திய; அரியை நரசிம்ம மூர்த்தியானவனும்; உம்பரார் நித்யஸூரிகளின்; கோமனை தலைவனும்; தோடு ஆர் இதழ்கள் மிக்க; நறுந் துழாய் துளசி மாலை அணிந்த; மார்வனை மார்பையுடைய பெருமானை; ஆர்வத்தால் அன்புடன் ஆசையுடன்; பாடாதார் பாடாதவர்களின்; பாட்டு என்றும் பாட்டு ஒருநாளும்; பாட்டு அல்ல பாட்டு ஆகாது; கேட்டாமே இதை நாம் கேட்டிருக்கிறோம்