PT 11.7.5

கார்வண்ணனைத் தொழாத கை கையல்ல

2016 மையார்கடலும் மணிவரையும்மாமுகிலும் *
கொய்யார்குவளையும் காயாவும்போன்றுஇருண்ட
மெய்யானை * மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை * கைதொழா கையல்லகண்டாமே.
2016 mai ār kaṭalum * maṇi varaiyum mā mukilum *
kŏy ār kuval̤aiyum kāyāvum * poṉṟu iruṇṭa
mĕyyāṉai * mĕyya malaiyāṉaic * caṅku entum
kaiyāṉai- * kai tŏzhā * kai alla kaṇṭāme

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2016. The lord who stays in the Thirumeyyam hills. and carries a conch in his hand has the color of the dark ocean, of a shining sapphire-like hill, of a dark cloud, of a kuvalai flower blooming on a branch and of a kāyām flower. If the hands of devotees have not worshiped him, they are not truly hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை ஆர் கடலும் கருத்த அழகிய கடலையும்; மணி வரையும் நீலமணிமயமான மலையையும்; மா முகிலும் காளமேகத்தையும்; கொய் ஆர் பறிக்கத் தகுந்த; குவளையும் நீலோத்பல புஷ்பத்தையும்; காயாவும் போன்று காயாம்பூவையும் ஒத்த; இருண்ட கருத்த; மெய்யானை திருமேனியையுடையவனும்; மெய்ய திருமெய்ய; மலையானை மலைக் கோயிலில் இருப்பவனும்; சங்கு ஏந்தும் சங்கை ஏந்தும்; கையானை கையையுடையவனுமான பெருமானை; தொழா கை தொழாத கைகளானவை; கை அல்ல கைகள் அல்ல; கண்டாமே இதனை நாம் நன்கு அறிவோம்