PT 11.7.3

பகவான் பெருமை பேசாதார் பேச்சு பேச்சல்ல

2014 தூயானைத் தூயமறையானை * தென்னாலி
மேயானை மேவாளுயிருண்டுஅமுதுண்ட
வாயானை * மாலைவணங்கி அவன்பெருமை
பேசாதார் * பேச்சுஎன்றும் பேச்சல்லகேட்டாமே.
2014 tūyāṉait * tūya maṟaiyāṉai * tĕṉ āli
meyāṉai * mevāl̤ uyir uṇṭu amutu uṇṭa
vāyāṉai ** mālai-vaṇaṅki * avaṉ pĕrumai
pecātār * peccu ĕṉṟum * peccu alla keṭṭāme

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2014. The faultless god of Thennāli (Thiruvāli) who is the divine Vedās drank the milk of Putanā and killed her. If devotees have not worshiped and praised Māl’s greatness, whatever they say is not truly speech.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூயானை தூய்மையானவனும்; தூய புனிதமான; மறையானை வேதப் பொருளாயிருப்பவனும்; தென் ஆலி அழகிய தென் திருவாலியில்; மேயானை ஸுலபனாய் இருப்பவனும்; மேவாள் பொருந்தாத பூதனையின்; உயிர் உண்டு உயிரை உண்டவனும்; அமுது யசோதையிடம் அமுதமான; உண்ட பாலைப் பருகின; வாயானை வாயையுடையவனுமான; மாலை வணங்கி திருமாலை வணங்கி; அவன் பெருமை அவன் பெருமை பற்றி; பேசாதார் பேசாதவர்கள்; பேச்சென்றும் பேச்சு ஒருநாளும்; பேச்சு அல்ல பேச்சு ஆகாது; கேட்டாமே இதை நாம் கேட்டிருக்கிறோம்