PT 11.4.7

Lord Rāma is Our Fortress.

இராமபிரானே நமக்கு அரண்

1988 இலைமலிபள்ளியெய்தியிதுமாயமென்ன

இனமாயமான்பின், எழில்சேர் *

அலைமலிவேற்கணாளை அகல்விப்பதற்கு

ஓருருவாயமானையமையா *

கொலைமலியெய்துவித்தகொடியோனிலங்கை

பொடியாக, வென்றியமருள் *

சிலைமலிசெஞ்சரங்கள்செலவுய்த்த நங்கள்

திருமால்நமக்குஓரரணே.

Text size