He Who Became a Swan and Taught the Scriptures of Dharma Will Protect Us.
அன்னமாகி அறநூல் உரைத்தவனே காப்பான்
1989 முன்னுலகங்களேழும்இருள்மண்டியுண்ண
முதலோடுவீடுமறியாது *
என்னிது? வந்ததென்னஇமையோர்திசைப்ப
எழில்வேதமின்றிமறைய *
பின்னும்வானவர்க்கும்முனிவர்க்கும்நல்கி
இருள்தீர்ந்திவ்வையம்மகிழ *
அன்னமதாயிருந்துஅங்கறநூலுரைத்த
அதுநம்மையாளுமரசே.