PT 10.6.8

இராவணனை வதைத்தவனா கட்டுண்டிருந்தவன்!

1905 நெறித்திட்டமென்கூழைநல்நேரிழையோடு
உடனாயவில்லென்னவல்லேயதனை *
இறுத்திட்டுஅவளின்பம்அன்போடணைந்திட்டு
இளங்கொற்றவனாய், துளங்காதமுந்நீர் *
செறித்திட்டுஇலங்கைமலங்க அரக்கன்
செழுநீள்முடிதோளொடுதாள்துணிய *
அறுத்திட்டவன்காண்மின் இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1905 nĕṟittiṭṭa mĕṉ kūzhai nal ner-izhaiyoṭu *
uṭaṉ āya vil ĕṉṉa val ey ataṉai *
iṟuttiṭṭu aval̤ iṉpam aṉpoṭu aṇaintiṭṭu *
il̤aṅ kŏṟṟavaṉ āy tul̤aṅkāta munnīr **
cĕṟittiṭṭu ilaṅkai malaṅka arakkaṉ *
cĕzhu nīl̤ muṭi tol̤ŏṭu tāl̤ tuṇiya *
aṟuttiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-8

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1905. As Rāma, the lord broke the bow that was born with Sita, and he married her who had precious ornaments and curly soft hair. When he was living happily with her as a prince, she was abducted by Rāvana, the king of Lankā. He built a bridge, crossed the ocean, fought with Rāvana, cut off his ten strong heads and his arms and legs and brought his wife back. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெறித்திட்ட அடர்ந்த; மென் மென்மையான; கூழை கூந்தலையும்; நல் நேர் அழகிய; இழையோடு ஆபரணங்களை உடைய; உடன் ஆய ஸீதையோடு உடன் பிறந்த; வில் என்ன வில் என்ன; வல் ஏய் மிடுக்கான; அதனை அந்த வில்லை; இறுத்திட்டு முறித்துவிட்டு; அவள் அவளுடன் கூடி; இன்பம் இன்பம் அடைந்து; அன்போடு அன்போடு அவளை; அணைந்திட்டு அணைத்த; இளம் இளைய; கொற்றவன் ஆய் யுவராஜாவாய் இருந்தவனை; துளங்காத ஒருவராலும் அசைக்க முடியாத; முந்நீர் செறித்திட்டு கடலில் அணைகட்டி; இலங்கை மலங்க இலங்கை கலங்க; அரக்கன் இராவணனின்; செழு நீள் செழித்த நீண்ட; முடி தலைகளையும்; தோளொடு தோள்களோடு; தாள் துணிய தாள்களையும் துணிய; அறுத்திட்டவன் அறுத்திட்ட பெருமானை; காண்மின் பாருங்கள்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!