PT 10.6.9

ஏழு மராமரங்களை எய்தவனா கட்டுண்டிருந்தவன்!

1906 சுரிந்திட்டசெங்கேழுளைப்பொங்கரிமாத்
தொலையப் பிரியாதுசென்றெய்தி * எய்தாது
இரிந்திட்டிடங்கொண்டடங்காததன்வாய்
இருகூறுசெய்தபெருமான், முனநாள் *
வரிந்திட்டவில்லால்மரமேழுமெய்து
மலைபோலுருவத்துஓரிராக்கதிமூக்கு *
அரிந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1906 curintiṭṭa cĕṅ kezh ul̤aip pŏṅku arimāt *
tŏlaiyap piriyātu cĕṉṟu ĕyti ĕytātu *
irintiṭṭu iṭaṅkŏṇṭu aṭaṅkātataṉ vāy *
iru kūṟu cĕyta pĕrumāṉ muṉa nāl̤ **
varintiṭṭa villāl maram ezhum ĕytu *
malaipol uruvattu or irākkati mūkku *
arintiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-9

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1906. When the Asuran Kesi came as a tawny horse, he split open his mouth and killed him, he broke the seven marā trees with his strong bow and he cut off the nose and ears of the Raksasi Surpanakha who was as large as a mountain. See, now he has stolen butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுரிந்திட்ட இருண்டிருக்கும்; செங் கேழ் உளை சிவந்த பிடரி முடியையுடைய; பொங்கு களித்து வரும்; அரிமா கேசி என்னும் குதிரை; தொலைய தொலைய; பிரியாது அதை விடாமல்; சென்று எய்தி மடக்கி சென்று; எய்தாது கிட்டவர விடாமல்; இரிந்திட்டு திரிந்து; இடங்கொண்டு இடம் கொடுக்காமல்; அடங்காததன் அடங்காத குதிரையின்; வாய் வாயை; இரு கூறு செய்த இரு கூறாக பிளந்த; பெருமான் பெருமான்; முன நாள் முன்பு ஒரு சமயம் ராமன்; வரிந்திட்ட வில்லால் கட்டுடைய வில்லால்; மரம் ஏழும் ஏழு மராமரங்களை; எய்து துளைத்த பெருமானை; மலைபோல் மலைபோன்ற; உருவத்து வடிவையுடைய; ஓர் இராக்கதி ஓரு ராக்ஷஸி சூர்ப்பணகையின்; மூக்கு அரிந்திட்டவன் மூக்கை அரிந்திட்டவனை; காண்மின் பாருங்கள்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!