(கீழ் பாட்டில் பரசுராமன் அதிலும் விஞ்சின அதி மானுஷ சேஷ்டிதங்கள் கொண்ட சக்கரவர்த்தி திரு மகன் சீல வ்ருத்த வேஷங்கள் அதி விக்ரம பிரதாபம் -அதி லிங்கித சர்வ லோக சாம்யம் – வைஷ்ணவ வைபவ அவதாரம் -கூரத்தாழ்வான் அத்தை அனுபவித்து வித்தாராகிறார் இதில் )
படைத்திட்டது இவ் வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல்