PT 10.6.6

பரசுராமனா கட்டுண்டிருந்தவன்!

1903 பழித்திட்டஇன்பப்பயன்பற்றறுத்துப்
பணிந்தேத்தவல்லார்துயராயவெல்லாம் *
ஒழித்திட்டுஅவரைத்தனக்காக்கவல்ல
பெருமான்திருமால், அதுவன்றியும்முன் *
தெழித்திட்டெழுந்தேஎதிர்நின்றமன்னன்
சினத்தோளவையாயிரமும் * மழுவால்
அழித்திட்டவன்காண்மின்இன்று ஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1903
pazhiththitta inpap payan paRRaRuththup *
paNin^thEththa vallAr thuyarAya vellAm, *
ozhiththittu avaraith thanakkAkka valla *
perumAn thirumAl athuvanRiyummun, *
thezhiththittu ezhun^thE ethirn^inRu mannan *
sinaththOL avai Ayiramum mazhuvAl *
azhiththittavan kANmin inRu AyssiyarAl *
aLaiveNNey uNtu AppuNtirun^thavanE 10.6.6

Ragam

ஸாவேரி

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1903. Our divine lord Thirumāl, who protects his devotees and removes the desires of evil passions for them if they worship him, cut off with his mazhu weapon the thousand arms of the angry Asuran Kārtaviryan when he came to fight with him. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move.(Dāmodara Leelai)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பழித்திட்ட சாஸ்திரங்களால் தள்ளப்பட்ட; இன்பப் பயன் சிற்றின்பப் பலன்களை; பற்று அறுத்து வேரோடு அறுத்து; பணிந்து திருவடிகளிலே விழுந்து; ஏத்த வல்லார் வணங்கும் பக்தர்களின்; துயர் ஆய எல்லாம் துன்பங்களை எல்லாம்; ஒழித்திட்டு போக்கி; அவரைத் அவர்களைத்; தனக்கு தன் தொண்டர்களாக; ஆக்கவல்ல செய்து கொள்ளவல்ல; பெருமான் திருமால் பெருமான் திருமாலை; அது அன்றியும் முன் அது அன்றியும் முன்பு; தெழித்திட்டு எழுந்தே பெரிய ஆரவாரத்தோடு; எதிர் நின்ற எதிரி என்று வந்து எதிர் நின்ற; மன்னன் கார்தவீரியார்ஜுனன் என்ற அரசனின்; சினத்தோள் அவை சினம் கொண்ட துடியா நின்றுள்ள; ஆயிரமும் ஆயிரம் தோள்களையும்; மழுவால் பரசு என்னும் மழுவால்; அழித்திட்டவன் அழித்தவனை; காண்மின் இன்று பாருங்கள் இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!