PT 10.6.5

திரிவிக்கிரமனா கட்டுண்டிருந்தவன்!

1902 நீண்டான்குறளாய்நெடுவானளவும்
அடியார்படும்ஆழ்துயராயவெல்லாம் *
தீண்டாமைநினைந்துஇமையோரளவும்
செலவைத்தபிரான், அதுவன்றியும்முன் *
வேண்டாமைநமன்தமர்என்தமரை
வினவப்பெறுவாரலரென்று * உலகேழ்
ஆண்டானவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1902
neeNtAn kuRaLAy netuvANnaLavum *
atiyAr patum Azh thuyarAya ellAm, *
theeNtAmai n^inain^thu imaiyOr aLavum *
sela vaiththa pirAn athuvanRiyummun, *
vENtAmai n^aman thamar en_thamarai *
vinavap peRuvAr alar,enRu, * ulakEzh-
ANtANnavan kANmin inRu AyssiyarAl *
aLaiveNNey uNtu AppuNtirun^thavanE 10.6.5

Ragam

ஸாவேரி

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1902. Wishing to remove the troubles of the gods, he went as a dwarf to Mahābali’s sacrifice, grew tall and measured the earth and the sky. He, the ruler of all the seven worlds, gives his grace to his devotees and protects them so that the messengers of Yama will not approach them. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குறள் ஆய் வாமனனாக வந்து; நெடு வான் அளவும் பரந்த ஆகாசமெங்கும்; நீண்டான் வளர்ந்தவனாய்; அடியார் படும் பக்தர்கள் அநுபவிக்கும்; ஆழ் துயராய எல்லாம் கொடிய துயரங்களை; தீண்டாமை நினைந்து போக்க நினைத்து; இமையோர் அளவும் நித்யஸூரிகளளவும்; செல செல்லும்படியாக திருவடிகளை; வைத்த வைத்தருளின; பிரான் பெருமானை உபகாரகனை; அது அன்றியும் முன் அது அன்றியும் முன்பு; நமன் தமர் யமபடர்கள்; என் தமரை எம் அடியார்களை; வேண்டாமை வேண்டாதவர்கள் என்பதால்; வினவப் பெறுவார் ஆராயக்கடவர் அல்லர்; அலர் என்று துன்புறுத்தக் கூடாது என்று; உலகு ஏழ் ஏழு உலகங்களையும்; ஆண்டான் அவன் அவன் தானே ஆள்கிறான்; காண்மின் இன்று பாருங்கள் இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!