PT 10.6.4

வாமனனா கட்டுண்டிருந்தவன்!

1901 தளர்ந்திட்டுஇமையோர்சரண்தாவெனத்
தான்சரணாய், முரணாயவனை * உகிரால்
பிளந்திட்டுஅமரர்க்கருள்செய்துகந்த
பெருமான்திருமால், விரிநீருலகை *
வளர்ந்திட்டதொல்சீர்விறல்மாவலியை
மண்கொள்ளவஞ்சித்துஒருமாண்குறளாய் *
அளந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1901
thaLarn^thittu imaiyOr saraN thAvenath * thAn-
saraNAy muraNAyavanai * ukirAl-
piLan^thittu amararkku aruL seythu ukan^tha *
perumAn thirumAl virin^eer ulakai, *
vaLarn^thitta tholseer viRal mAvaliyai *
maNkoLLa vanciththu orumAN kuRaLAy *
aLan^thittavan kANmin inRu AyssiyarAl *
aLaiveNNey uNtu AppuNtirun^thavanE 10.6.4

Ragam

ஸாவேரி

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1901. When the gods in the sky grew tired fighting with their enemy Hiranyan and went to the god and asked him for refuge, our god Thirumāl split open the chest of Hiranyan and joyfully gave his grace to the gods in the sky. He went as a dwarf to the famous heroic king Mahābali, cheated him, took his land and measured the earth and the sky with his two feet. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமையோர் தேவர்கள்; தளர்ந்திட்டு அஸுரர்களால் துன்பப்படுத்தப்பட்ட எங்களுக்கு; சரண் தா ரக்ஷகனாக வேண்டும் என்று கூற; என தான் சரண் ஆய் தான் ரக்ஷகனாக நின்று; முரணாயவனை பெரு மிடுக்கனான இரணியனை; உகிரால் பிளந்திட்டு நகங்களாலே பிளந்து; அமரர்க்கு அருள் தேவர்களுக்கு அருள்; செய்து உகந்த செய்து உகந்த; பெருமான் திருமால் பெருமான் திருமால்; வளர்ந்திட்ட மேன்மேலும் வளரும்; தொல் சீர் மிகுந்த செல்வத்தையுடைய; விறல் மா வலியை பலிஷ்டனான மஹாபலியின்; மண் கொள்ள பூமியைக் கொள்ள; ஒரு மாண் ஒப்பற்ற பிரம்மசாரி; குறள் ஆய் வாமனனாய் வந்து; விரி நீர் உலகை கடல் சூழ்ந்த உலகங்களை; வஞ்சித்து வஞ்சித்து; அளந்திட்டவன் அளந்த பெருமானை; காண்மின் இன்று காண்மின் இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!