PT 10.6.3

இரணியனைப் பிளந்தவனா கட்டுண்டிருந்தவன்!

1900 உளைந்திட்டெழுந்தமதுகைடவர்கள்
உலப்பில்வலியாரவர்பால் * வயிரம்
விளைந்திட்டதென்றெண்ணிவிண்ணோர்பரவ
அவர்நாளொழித்தபெருமான், முனநாள் *
வளைந்திட்டவில்லாளிவல்வாளெயிற்று
மலைபோல்அவுணனுடல் வள்ளுகிரால் *
அளைந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1900 ul̤aintiṭṭu ĕzhunta matu-kaiṭavarkal̤ *
ulappu il valiyār-avarpāl * vayiram
vil̤aintiṭṭatu ĕṉṟu ĕṇṇi viṇṇor parava *
avar nāl̤ ŏzhitta pĕrumāṉ muṉa nāl̤ **
val̤aintiṭṭa villāl̤i val vāl̤ ĕyiṟṟu *
malai pol avuṇaṉ uṭal val̤ ukirāl *
al̤aintiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-3

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1900. When the gods in the sky were worried that the Asuran Madhukaitabha had become a terrible enemy and that he would fight them, they went to the god who carries a bent bow, worshiped him and asked for his help and our dear lord destroyed the Asuran and saved them. With his sharp claws he split open the mountain-like body of the Asuran Hiranyan with sword-like teeth. See, now he has stolen the butter and the cowherd women have caught and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலப்பு இல் அளவில்லாத; வலியால் வலிமையோடு; எழுந்த எழுந்த; மது கைடவர்கள் மது கைடபர்கள்; அவர் பால் என்னும் அசுரர்களோடு; வயிரம் பகைமை; விளைந்திட்டது ஏற்பட்டுவிட்டது; என்று எண்ணி என்று எண்ணி; உளைந்திட்டு அஞ்சி நடுங்கி; விண்ணோர் பரவ தேவர்கள் துதிக்க; அவர் அந்த அசுரர்களின்; நாள் ஒழித்த ஆயுளை முடித்த; பெருமான் பெருமானும்; முன நாள் வேறு ஒரு சமயம்; வளைந்திட்ட வளைந்தவில்லையுடைய; வில்லாளி வில்லாளியும்; வல் வாள் வலிமையுடைய ஒளியுள்ள; எயிற்று பற்களையுடையவனும்; மலை போல் மலை போன்றவனுமான; அவுணன் இரணியனின்; உடல் உடலை; வள் உகிரா கூர்மையான நகங்களினால்; அளைந்திட்டவன் கிழித்தவனுமான பெருமானை; காண்மின் காண்மின்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!