Chapter 6

Naimeesāranyam - (வாள் நிலா)

நைமிசாரணியம்
Naimeesāranyam - (வாள் நிலா)
In Naimisaranya, the Lord manifests as the forest itself. Seeking refuge in the Lord by acknowledging one's limitations and with the goddess leading the way, they asked which place on earth is best suited for penance. Brahma fashioned a wheel from Dharba grass and rolled it. It stopped in this forest, indicating it as the ideal place for penance. Hence, it became known as Naimisaranya.
நைமிசாரணியத்தில் பகவான் காடு வடிவமாகவே இருக்கிறான். தம்முடைய தாழ்வுகளை எல்லாம் கூறிக்கொண்டு பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு பகவானைச் சரணடைகிறார் பூமியில் தவம் செய்வதற்கு ஏற்ற சிறந்த இடம் எதுவென்று கேட்டனர். பிரம்மா தர்ப்பத்தைச் சக்கரமாகச் செய்து உருட்டினார். அது இக்காட்டில் வந்து நின்றது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுவே என்று அது காண்பித்தது. அதனால் நைமிசம்-அரணியம் ஆயிற்று.
Verses: 998 to 1007
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கராகம்
Recital benefits: Will rule the world surrounded by sounding oceans under a white umbrella and become gods
  • PT 1.6.1
    998 ## வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள் * மாதரார் வன முலைப் பயனே
    பேணினேன் * அதனைப் பிழை எனக் கருதிப் * பேதையேன் பிறவி நோய் அறுப்பான் **
    ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி * இளையவர் கலவியின் திறத்தை
    நாணினேன் * வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 1
  • PT 1.6.2
    999 சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார் * திறத்தனாய் அறத்தையே மறந்து *
    புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் * போக்கினேன் பொழுதினை வாளா **
    அலம் புரி தடக்கை ஆயனே மாயா * வானவர்க்கு அரசனே *
    வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 2
  • PT 1.6.3
    1000 சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து * சுரி குழல் மடந்தையர் திறத்து *
    காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் * நமன் தமர் செய்யும் **
    வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் * வேலை வெண் திரை அலமரக் கடைந்த
    நாதனே * வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 3
  • PT 1.6.4
    1001 வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து * பிறர் பொருள் தாரம் என்று இவற்றை *
    நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி * எற்றி வைத்து ** எரி எழுகின்ற
    செம்பினால் இயன்ற பாவையைப் * பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி *
    நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 4
  • PT 1.6.5
    1002 இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று * இரந்தவர்க்கு இல்லையே என்று *
    நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ * நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை **
    கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால் * படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி *
    நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 5
  • PT 1.6.6
    1003 கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து * திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு *
    ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் * உணர்விலேன் ஆதலால் **
    நமனார் பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் * பரமனே பாற்கடல் கிடந்தாய் *
    நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 6
  • PT 1.6.7
    1004 நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் * நீதி அல்லாதன செய்தும் *
    துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே * துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் **
    வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா * வானவா தானவர்க்கு என்றும்
    நஞ்சனே * வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 7
  • PT 1.6.8
    1005 ஏவினார் கலியார் நலிக என்று * என்மேல் எங்ஙனே வாழும் ஆறு? * ஐவர்
    கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் * குறுங்குடி நெடுங் கடல் வண்ணா **
    பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு * உன் பாதமே பரவி நான் பணிந்து * என்
    நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 8
  • PT 1.6.9
    1006 ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி * உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் *
    தான் உடைக் குரம்பை பிரியும்போது * உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன் **
    தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே * திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய் *
    நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 9
  • PT 1.6.10
    1007 ## ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி * எழுமினோ தொழுதும் என்று *
    இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் * நைமிசாரணியத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து **
    காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் * மாலை தான் கற்று வல்லார்கள் *
    ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் * உம்பரும் ஆகுவர் தாமே 10