I Was Not Fortunate to Witness Your Playful Sports
நின் விளையாட்டுக்களைக் காணப்பெற்றிலேன்
716 குன்றினால்குடைகவித்ததும் கோலக்
குரவைகோத்ததும்குடமாட்டும் *
கன்றினால்விளவெறிந்ததும் காலால்
காளியன்தலைமிதித்ததுமுதலா *
வென்றிசேர்பிள்ளைநல்விளையாட்டமனைத்திலும்
அங்கென்னுள்ளமுள்குளிர *
ஒன்றும்கண்டிடப்பெற்றிலேனடியேன்
காணுமாறினியுண்டெனிலருளே.