PMT 7.10

O Kaṇṇa! You Got a Good Mother!

கண்ணா! நீ நல்ல தாயைப் பெற்றாய்!

717 வஞ்சமேவிய நெஞ்சுடைப்பேய்ச்சி

வரண்டுநார்நரம்பெழக்கரிந்துக்க *

நஞ்சமார்தருசுழிமுலையந்தோ!

சுவைத்துநீயருள்செய்துவளர்ந்தாய் *

கஞ்சன்நாள்கவர்கருமுகிலெந்தாய் !

கடைப்பட்டேன்வெறிதேமுலைசுமந்து

தஞ்சமேலொன்றிலேனுய்ந்திருந்தேன்

தக்கதேநல்லதாயைப்பெற்றாயே.

Text size