There is No Equal to Those Who Have Seen the Lord of Citrakūṭa
சித்திரகூடத்தானைக் கண்டோர்க்கு நிகரில்லை
744 தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *
தொன்னகரந்துறந்து * துறைக்கங்கைதன்னை
பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்
பரதனுக்குபாதுகமுமரசுமீந்து *
சித்திரகூடத்திருந்தான்றன்னை இன்று *
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.