This Earth Has Attained Great Fortune!
இப்பூவுலகம் பாக்கியம் பெற்றது!
745 வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று
வண்டமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்றன்னுயிரைவாங்கி *
சிலைவணக்கிமான்மரியவெய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.