PMT 1.9

I Must Leap and Roll upon the Ground in Tiruvaraṅgam

திருவரங்கத்தில் துள்ளிப் புரளவேண்டும்

655 தூராதமனக்காதல்தொண்டர்தங்கள்

குழாம்குழுமித்திருப்புகழ்கள்பலவும்பாடி *

ஆராதமனக்களிப்போடழுதகண்ணீர்

மழைசோரநினைந்துருகியேத்திநாளும் *

சீரார்ந்தமுழுவோசைபரவைகாட்டும்

திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *

போராழியம்மானைக்கண்டுதுள்ளிப்

பூதலத்திலென்றுகொலோபுரளும்நாளே?

Text size