When is the Day I Will Sit with the Devotees of Araṅgan?
அரங்கன் அடியார்களுடன் அமரும் நாள் என்று?
656 வன்பெருவானகமுய்யஅமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில்மனிசருய்ய *
துன்பமிகுதுயரகல அயர்வொன்றில்லாச்
சுகம்வளர அகமகிழுந்தொண்டர்வாழ *
அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்
அணியரங்கன்திருமுற்றத்து * அடியார்தங்கள்
இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்
இசைந்துடனேயென்றுகொலோவிருக்கு நாளே? (2)