PMT 1.8

When Will I Behold the Lord on the Serpent Couch and Attain Blissful Union!

அரவணையானைக் கண்டு இன்பக்கலவி எய்துவேனோ!

654 கோலார்ந்தநெடுஞ்சார்ங்கம்கூனற்சங்கம்

கொலையாழிகொடுந்தண்டுகொற்றவொள்வாள் *

காலார்ந்தகதிக்கருடனென்னும் வென்றிக்

கடும்பறவையிவையனைத்தும்புறஞ்சூழ்காப்ப *

சேலார்ந்தநெடுங்கழனிசோலைசூழ்ந்த

திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *

மாலோனைக்கண்டின்பக்கலவியெய்தி

வல்வினையேனென்றுகொலோவாழும்நாளே?

Text size