PMT 1.7

When is the Day I Will See Araṅgan and My Heart Will Dissolve!

அரங்கனைக் கண்டு அகம்நெகிழ்தல் எந்நாளோ!

653 மறந்திகழுமனமொழித்துவஞ்சமாற்றி

ஐம்புலன்களடக்கியிடர்ப்பாரத்துன்பம்

துறந்து * இருமுப்பொழுதேத்தியெல்லையில்லாத்

தொன்னெறிக்கண்நிலைநின்றதொண்டரான *

அறம்திகழும்மனத்தவர்தம்கதியைப்பொன்னி

அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *

நிறம்திகழும்மாயோனைக் கண்டு என்கண்கள்

நீர்மல்கஎன்றுகொலோநிற்கும்நாளே?

Text size