When is the Day My Heart Will Melt for Him!
என் மனம் உருகும் நாள் எந்நாளோ!
652 அளிமலர்மேலயனரனிந்திரனோடுஏனை
அமரர்கள்தம்குழுவுமரம்பையரும்மற்றும் *
தெளிமதிசேர்முனிவர்கள்தம்குழுவுமுந்தித்
திசைதிசையில்மலர்தூவிச்சென்றுசேரும் *
களிமலர்சேர்பொழிலரங்கத்துரகமேறிக்
கண்வளரும்கடல்வண்ணர்கமலக்கண்ணும் *
ஒளிமதிசேர்திருமுகமும்கண்டு கொண்டு என்
உள்ளமிகஎன்றுகொலோவுருகும்நாளே?