PMT 1.5

When is the Day I Will Worship the Gem-hued Lord!

மணிவண்ணனை வணங்கும் நாள் எந்நாளோ!

651 இணையில்லாவின்னிசையாழ்கெழுமியின்பத்

தும்புருவும்நாரதனுமிறைஞ்சியேத்த *

துணையில்லாத்தொன்மறைநூல்தோத்திரத்தால்

தொன்மலர்க்கணயன்வணங்கியோவாதேத்த *

மணிமாடமாளிகைகள்மல்குசெல்வ

மதிளரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *

மணிவண்ணனம்மானைக்கண்டுகொண்டு என்

மலர்சென்னியென்றுகொலோவணங்கும்நாளே?

Text size