When is the Day I Will Perform Archana for Araṅgan!
அரங்கனை அருச்சிக்கும் நாள் எந்நாளோ!
650 மாவினைவாய்பிளந்துகந்தமாலைவேலை
வண்ணணைஎன்கண்ணணை * வன்குன்றமேந்தி
ஆவினையன்றுய்யக்கொண்டஆயரேற்றை
அமரர்கள் தந்தலைவனைஅந்தமிழினின்பப்
பாவினை * அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்
பயிலரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
கோவினை நாவுறவழுத்திஎன்றன்கைகள்
கொய்ம்மலர்தூய்என்றுகொலோகூப்பும்நாளே?