When Will I Live in Intimate Association with the Devotees of Araṅgan!
அரங்கனடியார்களோடு நெருங்கி வாழ்வேனோ!
649 எம்மாண்பின்அயன்நான்குநாவினாலும்
எடுத்தேத்திஈரிரண்டுமுகமுங்கொண்டு *
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடும்
தொழுதேத்தி இனிதிறைஞ்சநின்ற * செம்பொன்
அம்மான்றன்மலர்க்கமலக்கொப்பூழ்தோன்ற
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
அம்மான்றனடியிணைக்கீழலர்களிட்டங்
கடியவரோடென்றுகொலோஅணுகும்நாளே?