Your browser does not support the audio element.
audio
381 காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் * அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள் *
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ *
நாயகன் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2)
382 அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் *
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்! *
செங்கணெடுமால் சிரீதரா! என்றுஅழைத்தக்கால் *
நங்கைகாள்! * நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
383 உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையுமுகந்து *
எச்சம்பொலிந்தீர்காள்! என்செய்வான்பிறர்பேரிட்டீர்? *
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் * நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
384 மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை *
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை *
வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால் *
நானுடை நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
385 மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை *
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை *
குலமுடைக்கோவிந்தா! கோவிந்தா! என்றுஅழைத்தக்கால் *
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
386 நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு *
கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்காதே *
சாடிறப்பாய்ந்ததலைவா! தாமோதரா! என்று *
நாடுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
387 மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு * அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்! *
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் * நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
388 நம்பிபிம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் *
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் *
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் *
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
389 ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் * உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு *
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ *
நாத்தகு நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
390 சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய *
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த *
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர் *
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2)