PAT 3.4.6

அந்தமொன்றில்லாத ஆயப்பிள்ளை

259 சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும் *
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச *
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில் *
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப்
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ!
259 சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல் * திருத்திய கோறம்பும் திருக்குழலும் *
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ் * வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச **
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை * அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில் *
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப் * பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ (6)
259 cinturam ilaṅkat taṉ tirunĕṟṟimel * tiruttiya koṟampum tirukkuzhalum *
antaram muzhavat taṇ tazhaik kāviṉkīzh * varum āyaroṭu uṭaṉ val̤aikol vīca **
antam ŏṉṟu illāta āyap pil̤l̤ai * aṟintu aṟintu iv vīti potumākil *
pantu kŏṇṭāṉ ĕṉṟu val̤aittu vaittup * paval̤avāy muṟuvalum kāṇpom tozhī (6)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

259. He wears a shining sinduram and a perfect nāmam on his divine forehead. As the lovely music of flutes and the sound of drums play, he will come into the flourishing grove with the cowherds carrying their grazing sticks He is a beautiful cowherd child, yet he is the eternal god When he walks on the street as if he knows everything, let's stop him and tell him that he stole our ball and see the lovely smile on his coral mouth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சிந்துரம் இலங்க சிந்தூரம் துலங்க; தன் திரு நெற்றி மேல் அவன் நெற்றி மேல்; திருத்திய கோறம்பும் அழகிய திலகப் பொட்டும்; திருக்குழலும் தலைமுடியும்; அந்தரம் முழவ ஆகாசம் அடங்கலும் மத்தள ஓசையும்; தண் தழை தோழர்கள் பிடித்த; காவின்கீழ் பீலிக்குடையின் கீழ்; வரும் ஆயரோடு ஆய்ப்பாடி பிள்ளைகளோடு வரும்; உடன் வளைகோல் வீச வளைந்த கொம்பை வீசிக்கொண்டு; அந்தம் ஒன்று இல்லாத எல்லையில்லாத அழகுடைய; ஆயப் பிள்ளை ஆயர் பிரான்; அறிந்து அறிந்து தெரிந்து கொண்டே; இவ் வீதி இந்த வீதிவழியே; போதும் ஆகில் வருவானேயாகில்; பந்து கொண்டான் நம் பந்தை எடுத்துக்கொண்டான்; என்று வளைத்து வைத்து என்று அவனைவளைத்துப் பிடித்து; பவளவாய் சிவந்த அழகியவாயின்; முறுவலும் புன்முறுவலையும்; காண்போம் தோழீ! மனம் குளிரப் பார்ப்போமடி தோழி
taṉ tiru nĕṟṟi mel He has on His forehead; tiruttiya koṟampum a perfect nāmam; cinturam ilaṅka and shining sinduram; tirukkuḻalum with beautiful hair; varum āyaroṭu comes along with cowherd children; kāviṉkīḻ under the umbrella made of peacock feathers; taṇ taḻai held by His friends; antaram muḻava with the sound that calms the sky; āyap pil̤l̤ai the Lord of aiyarpadi; antam ŏṉṟu illāta with boundless beauty; uṭaṉ val̤aikol vīca is swinging a curved horn; potum ākil if He comes; aṟintu aṟintu knowingly; iv vīti on these streets; ĕṉṟu val̤aittu vaittu lets catch hold of Him accusing that; pantu kŏṇṭāṉ He took our ball; muṟuvalum to see His beautiful smile; paval̤avāy from His red coral like mouth; kāṇpom, toḻī! o friend, lets see Him to satisfy our mind