PAT 3.4.5

திருமாலிருஞ்சோலை மாயன் ஆயன்

258 சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து *
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின் *
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால் *
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. (2)
258 cuṟṟi niṉṟu āyar tazhaikal̤ iṭac * curul̤paṅki nettirattāl aṇintu *
paṟṟi niṉṟu āyar kaṭaittalaiye * pāṭavum āṭak kaṇṭeṉ ** aṉṟip piṉ
maṟṟu ŏruvarkku ĕṉṉaip pecalŏṭṭeṉ * māliruñcolai ĕm māyaṟku allāl *
kŏṟṟavaṉukku ival̤ ām ĕṉṟu ĕṇṇik * kŏṭumiṉkal̤ kŏṭīrākil kozhampame (5)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

258. I saw the cowherds carrying umbrellas made of peacock feathers standing around Kannan whose curly hair is bedecked with beautiful peacock feathers. They sang and danced in front of their doorsteps. I don’t want you to give me in marriage to anyone except Māyan, the lord of Thirumālirunjolai. You should realize that I belong only to the victorious one and give me in marriage to him. If you don’t, it will plunge me into sorrow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுற்றி நின்று ஆயர் ஆயர்கள் சூழ்ந்து நின்று; தழைகள் இட பீலிக் குடைகளைப் பிடித்து வர; சுருள் பங்கி சுருண்டிருக்கும் தலைமுடியை; அழகாக அழகாக; நேத்திரத்தால் மயில் தோகைக் கண்களாலே அலங்கரித்து; பற்றி நின்று ஆயர் தோழர்களுடன் கூடி; கடைத் தலையே தலைக்கடையில் தலை வாசலிலே; பாடவும் ஆடிப் பாடி; ஆடக் கண்டேன் களிப்பதைக் கண்டேன்; அன்றிப் பின் அதன் பின்; மற்று ஒருவர்க்கு வேறு ஒருவருக்கு என்னை; என்னைப் பேசலொட்டேன் மணம் முடிக்கும் பேச்சை அனுமதியேன்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையிலிருக்கும்; எம் மாயற்கு அல்லால் கண்ணபிரானை தவிர்த்து; கொற்றவனுக்கு இவளாம் பிரானுக்கு ஏற்றவள் இவள்; என்று எண்ணி கொடுமின்கள் என்று எண்ணி கொடுங்கள்; கொடீராகில் கொடுக்காமல் இருந்தால்; கோழம்பமே குழப்பம் தான் உண்டாகும்
cuṟṟi niṉṟu āyar the cowherds surround Him; taḻaikal̤ iṭa and carry umbrellas made of peacock feathers; curul̤ paṅki His curly hair is; aḻakāka bedecked with; nettirattāl beautiful peacock feathers; āṭak kaṇṭeṉ I saw them; pāṭavum dancing; kaṭait talaiye in front of their doorsteps; paṟṟi niṉṟu along with cowherd friends; aṉṟip piṉ moving forward; ĕṉṉaip pecalŏṭṭeṉ I will not permit to be given in marriage; maṟṟu ŏruvarkku to any other person; ĕm māyaṟku allāl other than; māliruñcolai Kannan who resides in Thirumālirunjolai; ĕṉṟu ĕṇṇi kŏṭumiṉkal̤ give me to Him in marriage; kŏṟṟavaṉukku ival̤ām as a suitable bride; kŏṭīrākil if not; koḻampame it will lead to confusion