அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2-4-5– –
பதவுரை
நம்பி–(பால சாபலத்தால்) பூர்ணனே! செப்பு–பொற் கலசம் போன்ற இள மெல் முலையார்கள்–இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள் சிறுபுறம் பேசி–(உன் மேலே) அற்பமான