NMT 92

சிரீதரனுக்கே நான் அடிமை

2473 என்றும்மறந்தறியேன் என்னெஞ்சத்தேவைத்து *
நின்றுமிருந்தும் நெடுமாலை * - என்றும்
திருவிருந்தமார்பன் சிரீதரனுக்காளாய் *
கருவிருந்தநாள்முதலாக்காப்பு.
2473 ĕṉṟum maṟantaṟiyeṉ * ĕṉ nĕñcatte vaittu *
niṉṟum iruntum nĕṭumālai ** - ĕṉṟum
tiruvu irunta mārpaṉ * cirītaraṉukku āl̤āy *
karuvu irunta nāl̤ mutalāk kāppu (92)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2473 I do not ever forget Nedumāl who abides in my heart and will stay there for ever. I am a devotee of Sridharan with Lakshmi on his chest and he has protected me from the time I was in the embryo in my mother’s womb.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு இருந்த பிராட்டி இருக்கும்; மார்பன் மார்பையுடைய; சிரீதரனுக்கு ஆளாய் சிரீதரனுக்கு ஆளாய்; கரு இருந்த கர்ப்பத்திலிருந்த; நாள் முதலா நாள் தொடங்கி; காப்பு காக்கும்; நெடு மாலை திருமாலை; என் என்னுடைய; நெஞ்சத்தே நெஞ்சத்திலே; வைத்து ஸ்தாபித்து; நின்றும் நின்றும்; இருந்தும் இருந்தும்; என்றும் என்ற எல்லா நிலைமைகளிலும்; மறந்து அவனை மறவாமல்; அறியேன் சிந்திப்பவனாயிருக்கின்றேன்
karu irundha nāl̤ mudhalā from the time ī was in the womb; kāppu since ī received protection (from emperumān); thiru enṛum irundha mārvan sirīdharanukku to that thirumāl̤ who has pirātti (ṣrī mahālakshmi) residing permanently on his chest; āl̤ āy being a servitor; nedu mālai that supreme being; en nenjaththu in my heart; vaiththu firml establishing; ninṛum irundhum enṛum in all states such as standing, sitting etc; maṛandhaṛiyĕn ī kept thinking (of him) without forgetting