NMT 72

நாரணனே நல்லறமும் வேதமும் தவமும்

2453 இல்லறமில்லேல் துறவறமில்லென்னும் *
சொல், அறமல்லனவும்சொல்லல்ல * - நல்லற
மாவனவும் நால்வேதமாத்தவமும் * நாரணனே
யாவது ஈதன்றென்பாரார்?
2453 இல்லறம் இல்லேல் * துறவறம் இல் என்னும் *
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல ** நல்லறம்
ஆவனவும் * நால் வேத மாத் தவமும் * நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்? (72)
2453 illaṟam illel * tuṟavaṟam il ĕṉṉum *
cŏl aṟam allaṉavum cŏl alla ** - nallaṟam
āvaṉavum * nāl veta māt tavamum * nāraṇaṉe
āvatu ītu aṉṟu ĕṉpār ār? (72)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2453. The proverb may say, “If one has not had a family life, he cannot be a sage, ” but that is not dharma. Good dharma, the four Vedās and tapas are all only the god Nāranan himself. Who can say this is not right?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இல் என்னும் இல்லமாகிய; இல்லறம் கர்மயோகமே உபாயம் என்பது; இல்லேல் ஏற்புடையது அல்ல; துறவறம் துறவறத்தைக் குறிக்கும்; சொல் அல்லன ஞானமும் உபாயம் அல்ல; அறமும் பக்தி யோகம்; நல்லறம் நல்ல அறம்பொருந்திய; ஆவனவும் நாமஸங்கீர்த்தனம் ஆகிய; சொல் அல்ல உபாயங்களும் தஞ்சமல்ல; நால் வேதம் நான்கு வேதங்களாலும்; மா பெரும்; தவமும் தவங்களாலும் அறியப்படுபவை; நாரணனே நாராயணன்; ஆவது அருளாலே என்னும்; என்பார் ஆர் இந்த உண்மையை; ஈது அன்று? மறுப்பார் உண்டோ?
illaṛam il ennum sollum those authentic souces which say that karma yŏgam (path of carrying out of deeds), which is the rule for gruhastham (way of life for married people) and which is accepted by ṣāsthras, is the means [for attaining mŏksham]; sol alla not authentic; illĕl even if it is not (means); thuṛavaṛam il ennum sollum the authentic sources which say that gyāna yŏgam (path of knowledge) is the means; sol alla not authentic; illĕl even otherwise; allana aṛam il ennum sollum authentic souces which say that others (bhakthi yŏgam (path of devotion), dhĕṣavāsam (residing in a divine abode), thirunāma sangīrthanam (reciting divine names of emperumān) etc) are the means; sol alla not authentic; nal aṛam āvanavum gyānam, bhakthi etc which are righteous paths; nāl vĕdha mā thavamum karmayŏgam which has been spoken of in the four vĕdhas; nāraṇanĕ āvadhu give results due to the grace of ṣrīman nārāyaṇa; īdhu this truth; anṛu enbār ār who is there who will say that this is not correct?