NMT 7

நாரணனே! நான் உன்னையன்றியிலேன்

2388 இன்றாக நாளையேயாக * இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென்பாலதே * - நன்றாக
நானுன்னை அன்றி இலேன்கண்டாய் * நாரணனே!
நீயென்னையன்றியிலை.
2388 இன்று ஆக * நாளையே ஆக * இனிச் சிறிதும்
நின்று ஆக * நின் அருள் என் பாலதே ** நன்றாக
நான் உன்னை * அன்றி இலேன் கண்டாய் * நாரணனே
நீ என்னை அன்றி இலை 7
2388 iṉṟu āka * nāl̤aiye āka * iṉic ciṟitum
niṉṟu āka * niṉ arul̤ ĕṉ pālate ** - naṉṟāka
nāṉ uṉṉai * aṉṟi ileṉ kaṇṭāy * nāraṇaṉe
nī ĕṉṉai aṉṟi ilai -7

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2388. Whether it is today or tomorrow or even a little time after, your grace is always with me. I do not see refuge except you. O, Nārana, see, I am not without you, and you are not without me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நாரணனே! நாராயணனே!; இன்று ஆக இன்றைக்கோ; நாளையே ஆக நாளைக்கோ; இனிச் சிறிது இன்னும் சிறிது; நின்று ஆக காலம் கழித்தோ; நின் அருள் உன்னுடைய அருள்; என்பாலதே என்னிடத்தில்; நன்றாக பூர்ணமாக உள்ளது; நான் உன்னை நான் உன்னை; அன்றி விட்டு வேறு; இலேன் கண்டாய் புகலிடம் இல்லாதவன்; நீ என்னை நீ என்னைத் தவிர்த்து; அன்றி இலை பரிபூர்ணனாக மாட்டாய்
nāraṇanĕ ŏh nārāyaṇa!; inṛu āga it could be today; nāl̤aiyĕ āga it could be tomorrow; ini siṛidhu ninṛāga it could be after sometime; nin arul̤ your grace; en pāladhĕ will fall on me; nanṛu āga it is certain; nān unnai anṛi ilĕn kaṇdāy you would see that ī have no refuge other than you; you too; ennai anṛi ilai do not have one to take care of, other than me