NMT 8

மனமே! மாலே நமக்குத் துணை

2389 இலைதுணைமற்றென்னெஞ்சே ஈசனைவென்ற *
சிலைகொண்டசெங்கண்மால்சேரா * - குலைகொண்ட
ஈரைந்தலையான் இலங்கையையீடழித்த *
கூரம்பனல்லால்குறை.
2389 ilai tuṇai maṟṟu ĕṉ nĕñce! * īcaṉai vĕṉṟa *
cilai kŏṇṭa cĕṅkaṇ māl cerā ** - kulai kŏṇṭa
īr aintalaiyāṉ * ilaṅkaiyai īṭu azhitta *
kūr ampaṉ allāl kuṟai -8

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2389. O heart, there is no help for me except the lovely-eyed Thirumāl who conquered Shivā and took his bow and cut off the ten heads of the king of Lankā with his sharp arrows, destroying the pride of Lankā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சே! என் மனமே!; ஈசனை வென்ற ருத்திரனை வென்ற; சிலை வில்லை; கொண்ட வாங்கிக் கொண்ட; செங் கண் சிவந்த கண்களையுடைய; மால் சேரா பெருமானை வணங்காதவனும்; குலை கொண்ட கொத்தாக இருந்த; ஈர் ஐந்து பத்து; தலையான் தலைகளையுடைய ராவணனை; ஈடழித்த அழித்த; கூர் கூர்மையான; அம்பன் அம்புகளை உடையவனான; அல்லால் ராமனைத் தவிர; குறை விரும்பத் தகுந்த; துணை மற்று துணைவன் நமக்கு; இலை வேறு ஒருவர் இல்லை
en nenjĕ ŏh my heart!; īsanai venṛa one who defeated rudhra; silai koṇda one who donned the bow; sem kaṇ māl emperumān who has lotus like eyes; sĕrā one who did not bow down and get redeemed, but got annihilated; kulai koṇda īraindhu thalaiyān rāvaṇa who had ten heads close together as if in a cluster; ilangaiyai lankā; īdu azhiththa one who annihilated; kūr amban allāl other than (that) ṣrī rāma who has sharp arrows; kuṛai during the times when (we) have difficulties; maṝu thuṇai support other than him; ilai we do not have