NMT 63

திருமாலைப் பூசித்தே பொழுது போக்குக

2444 தரித்திருந்தேனாகவே தாராகணப்போர் *
விரித்துரைத்தவெந்நாகத்துன்னை * - தெரித்தெழுதி
வாசித்தும்கேட்டும் வணங்கிவழிபட்டும் *
பூசித்தும்போக்கினேன்போது.
2444 தரித்திருந்தேன் ஆகவே * தாரா கணப் போர் *
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னை ** தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் * வணங்கி வழிபட்டும் *
பூசித்தும் போக்கினேன் போது 63
2444 tarittirunteṉ ākave * tārā kaṇap por *
virittu uraitta vĕm nākattu uṉṉai ** - tĕrittu ĕzhuti
vācittum keṭṭum * vaṇaṅki vazhipaṭṭum *
pūcittum pokkiṉeṉ potu -63

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2444. I have spent all my time reading about you, hearing about you, writing about you understanding you, praising you, worshiping you, and doing pujas for you who created the stars, and rest on Adisesha, the snake on the ocean,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தாரா கண நக்ஷத்ரகணங்களினுடைய; போர் ஸஞ்சாரத்தை; விரித்து விஸ்தாரமாக; உரைத்த சொன்னவனும்; வெம் நாகத்து ஆதிசேஷனை சரீரமாக; உன்னை உடைய உன்னை; தெரித்து அநுஸந்தித்தும்; எழுதி எழுதியும்; வாசித்தும் படித்தும்; கேட்டும் கேட்டும்; வணங்கி வணங்கியும்; வழிபட்டும் வழிபட்டும்; பூசித்தும் அர்ச்சித்தும்; போது காலத்தை; போக்கினேன் கழித்து கொண்டிருக்கிறேன்; ஆகவே ஆதலால்; தரித்திருந்தேன் வாழ்ச்சி பெற்றேன்
thāragaṇam group of stars’; pŏr (their) movement; viriththu uraiththa one who let it be known widely (through the ṣāsthram of astrology); vem nāgaththu unnai you (emperumān) who are the antharāthmā (indwelling soul) of thiruvanananthāzhwān (ādhiṣĕshan) who is very fiery for enemies; theriththu meditating upon; ezhudhi writing about; vāsiththum reading (what had been written); kĕttum hearing (from many people); vaṇangi bowing down; vazhipattum carrying out thiruvārādhanam (elaborate worship); pūsiththum worshipping; pŏdhu pŏkkinĕn ī am spending my time; āgavĕ since ī did like this; thariththirundhĕn ī was existing