NMT 64

நாரணனையே பூசித்தப் துதியுங்கள்

2445 போதான இட்டிறைஞ்சியேத்துமினோ * பொன்மகரக்
காதானை ஆதிப்பெருமானை * - நாதானை
நல்லானைநாரணனை நம்மேழ்பிறப்பறுக்கும்
சொல்லானை * சொல்லுவதேசூது.
2445 potāṉa * iṭṭu iṟaiñci ettumiṉo * pŏṉ makarak
kātāṉai * ātip pĕrumāṉai ** nātāṉai
nallāṉai nāraṇaṉai * nam ezh piṟappu aṟukkum
cŏllāṉai * cŏlluvate cūtu -64

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2445. Real praise is to praise him only. Place flowers at his feet and worship the ancient god, the lord of the gods. The mantra that destroys all seven births is the names of Nāranan, the good lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் அழகிய; மகர மகர குண்டலங்களை; காதானை காதுகளில் அணிந்துள்ள; ஆதிப் பெருமானை ஆதிப் பெருமானை; நாதானை நாதனை; நல்லானை அனைவரிடமும் அன்புடைய நல்லவனை; நாரணனை நாராயணனை; நம் ஏழ் நமது ஏழு ஏழு; பிறப்பு பிறப்புக்களையும்; அறுக்கும் போக்கவல்லவனின்; சொல்லானை திருநாமங்களை; போதான இட்டு மணம் மிக்க மலரிட்டு; இறைஞ்சி ஏத்துமினோ வணங்கி துதித்து; சொல்லுவதே வாயார வாழ்த்துவதே; சூது நல்ல உபாயம்
pon magaram kādhānai one who is donning beautiful earrings in the shape of fish; ādhi the causative entity for the world; perumānai one with greatness; nādhānai being the lord (of all); nallānai having the quality of vāthsalyam (motherly love); nāraṇanai one who is famously known as nārāyaṇa; nam ĕzh piṛappu aṛukkum sollānai about the purushŏththama (best among all sentient entities) whose divine names will sever our connection with repeated births; pŏdhu āna ittu iṛainji ĕththuminŏ offering anything which goes in the name of flower, bowing down to him and praising him; solluvadhĕ reciting (his divine names wholeheartedly); sūdhu apt activity for us