Your browser does not support the audio element.
audio
607 தாமுகக்கும்தம்கையில் சங்கமேபோலாவோ? *
யாமுகக்குமெங்கையில் சங்கமுமேந்திழையீர் *
தீமுகத்துநாகணைமேல் சேரும்திருவரங்கர் *
ஆ முகத்தைநோக்காரால் அம்மனே! அம்மனே! (2)
608 எழிலுடையஅம்மனைமீர்! என்னரங்கத்தின்னமுதர் *
குழலழகர்வாயழகர் கண்ணழகர் * கொப்பூழில்
எழுகமலப்பூவழக ரெம்மானார் * என்னுடைய
கழல்வளையைத் தாமும்கழல்வளையேயாக்கினரே.
609 பொங்கோதம்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் *
அங்காதுஞ்சோராமே ஆள்கின்றவெம்பெருமான் *
செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார் *
எங்கோல்வளையால் இடர்தீர்வராகாதே? (2)
610 மச்சணிமாட மதிளரங்கர்வாமனனார் *
பச்சைப்பசுந்தேவர் தாம்பண்டுநீரேற்ற *
பிச்சைக்குறையாகி என்னுடையபெய்வளைமேல் *
இச்சை யுடையரேல் இத்தெருவேபோதாரே ?
611 பொல்லாக்குறளுருவாய்ப் பொற்கையில்நீரேற்று *
எல்லாவுலகும் அளந்துகொண்ட எம்பெருமான் *
நல்லார்கள் வாழும் நளிரரங்கநாகணையான் *
இல்லாதோம்கைப்பொருளும் எய்துவானொத்துளனே.
612 கைப்பொருள்கள்முன்னமே கைக்கொண்டார் * காவிரிநீர்
செய்ப்புரளவோடும் திருவரங்கச்செல்வனார் *
எப்பொருட்கும்நின்று ஆர்க்குமெய்தாது * நான்மறையின்
சொற்பொருளாய்நின்றார் என்மெய்ப்பொருளும்கொண்டாரே.
613 உண்ணாதுறங்காது ஒலிகடலையூடறுத்து *
பெண்ணாக்கையாப்புண்டு தாமுற்றபேதெல்லாம் *
திண்ணார்மதிள்சூழ் திருவரங்கச்செல்வனார் *
எண்ணாதே தம்முடைய நன்மைகளேயெண்ணுவரே.
614 பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்கு * பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப்பன்றியாம் *
தேசுடையதேவர் திருவரங்கச்செல்வனார் *
பேசியிருப்பனகள் பேர்க்கவும்பேராவே. (2)
615 கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக்கைப்பிடிப்பான் *
திண்ணார்ந்திருந்த சிசுபாலன்தேசழிந்து *
அண்ணாந் திருக்கவே ஆங்கவளைக்கைப்பிடித்த *
பெண்ணாளன்பேணுமூர் பேருமரங்கமே.
616 செம்மையுடைய திருவரங்கர்தாம்பணித்த *
மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுசித்தர்கேட்டிருப்பர் *
தம்மையுகப்பாரைத் தாமுகப்பரென்னும்சொல் *
தம்மிடையேபொய்யானால் சாதிப்பாராரினியே? (2)