இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –
அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு எண்ணத்தான் ஆமோ இமை ——-97-
பதவுரை
அலர் எடுத்த உத்தியான்–தாமரைப் பூ ஓங்கி யிருக்கப் பெற்ற